Local

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக சீனியின் விலை உயர்வு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஒரு கிலோ சீனியின் 150 ரூபாயை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மிக சிறிய காலப்பகுதியினுள் சீனியின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சீனி விலையை 100 ரூபாவாக நிர்ணயிக்க கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும் சீனியின் விலை திடீரென 150 ரூபாயாக அதிகரித்துள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

சீனி விலை அதிகரித்தமை தொடர்பில் உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு எவ்வித காரணத்தையும் இதுவரையில் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading