Local

இலவசமாக மின்சார இணைப்பை வழங்க நடவடிக்கை!

மின்சார இணைப்புகளை பெற்றுக்கொள்ள முடியாத அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக மின்சாரத்தை வழங்குவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும உறுதி அளித்துள்ளார்.

மின்சாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து மாத்தறையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையில் நாட்டு மக்களுக்கு சலுகை அடிப்படையில் மின்சாரம் வழங்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இந்த ஆண்டின் இறுதிக்குள் குறித்த  இலக்கை அடைய முடியுமெனவும்  அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தெற்கில் மின்சார இணைப்புகளை பெற்றுக்கொள்ள முடியாதுள்ள ஆயிரத்து 607 வீடுகளுக்கு மின்சாரத்தை பெற்றுக்கொடுக்க உள்ளதாகவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading