Local

இளம் பிக்குவை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வயோதிபப் பெண்!

மொறட்டுவை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வரும் 15 வயதான இளம் பௌத்த பிக்குவை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் வயோதிப பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விகாரைக்கு அருகில் அமைந்துள்ள வீட்டில் வசித்து வரும் 51 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக மொறட்டுவை தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் இளம் பிக்கு, சம்பவம் தொடர்பாக விகாரையின் தலைமை பிக்குவுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, அவர் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாடு தொடர்பாக விசாரணைகளை நடத்திய காவல்துறையினர் பெண்ணை கைது செய்துள்ளனர்.

குறித்த வயோதிபபெண், இரண்டு சந்தர்ப்பங்களில் இளம் பௌத்த பிக்குவை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading