GossipWorld

இளைஞர்களுக்கு இலவச ஆணுறைகள் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

பிரான்ஸ் நாட்டிலுள்ள மருந்தகங்களில் இளைஞர்களுக்கு இலவச ஆணுறைகள் வழங்கப்படும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அறிவித்துள்ளார்.

இது கருத்தடையில் ஒரு சிறிய புரட்சி என்று கூறியுள்ள இமானுவல் மேக்ரான், ஜனவரி 1 முதல், பிரான்ஸ் நாட்டு மருந்தகங்களில், 18 வயது முதல் 25 வயது வரையுள்ள இளைஞர்களுக்கு இலவசமாக ஆணுறைகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இளம்பெண்கள் எதிர்பாராமல் கர்ப்பமுறுவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், கடந்த சில ஆண்டுகளாக பாலுறவு மூலம் பாவும் நோய்கள் அதிகரித்து வருவதாக பிரெஞ்சு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

ஆகவே, தேவையற்ற கர்ப்பங்களை தவிர்ப்பதற்காகவும், பாலுறவு மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவதற்காகவும் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.  

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading