Lead News

இளைஞர்கள் வாழ்வை சீரழிக்கும் போதைப்பொருள் பாவனை!

மனிதர்கள் இவ்வுலகில் பலவிதமான பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். அவற்றில் நல்லவையும் உள்ளன, தீயவையும் உள்ளன.

மனித வாழ்வை சீர்குலைக்கும் தீய பழக்கம்தான் போதைப்பொருள் பாவனை ஆகும். இப்பழக்கம் பலரு வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கின்றது. ஐஸ், அபின் கஞ்சா, ஹெரோயின் போன்ற போதைப் பொருட்களின் பாவனையினால் பலரதுவாழ்வு சீரழிந்து போயுள்ளது.

போதைப் பழக்கத்துக்கு உள்ளாகின்ற இளைஞர்கள் கல்வி செயல்பாட்டிலும் மற்றைய நடவடிக்கைகளிலும் பின்னடைவாகவே உள்ளனர்.

மேலும் இன்றைய காலத்தில் இளைஞர்கள் தமது பெற்றோர்களுடன் செலவிடும் நேரத்தை விட அதிக நேரம் தொலைத்தொடர்பு சாதனங்களிலேயே செலவிடுகின்றனர். இதன் காரணமாகவும் சில சந்தர்ப்பங்களில் சண்டை சச்சரவுகள் மற்றும் மனஅழுத்தம் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் போதைப்பொருட்களுக்கு அடிமையாகின்றனர்.

நாட்டின் பல மாகாணங்களில் மாணவர்களையும் இலக்குவைத்து போதைவஸ்து பொருட்கள் பல நாடுகளில் இருந்து வந்து சேருகின்றன. இன்றைய நாட்களில் மாணவர்கள் மத்தியிலும் போதைப் பொருள் பாவனை உள்ளது. இது வெகுவாக பறந்து கிடக்கின்றது மேலும் இவ்வாறான பழக்கங்களை வானவர்கள் மத்தியில் பரப்புவதின் ஊடாக மாகாணங்களில் கல்வி செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு பாடசாலையில் கல்வவி கற்கும் மாணவர்களும் பின் தங்கிய நிலையிலேயே காணக்கூடிய தன்மையை நாம் அவதானிக்கினறோம்.

 

குறிப்பாக வடக்கு, கிழக்கு போன்ற மாகாணங்களில் போதைவஸ்து பழக்கம் இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வருகின்றது.

 

அதிலும் அன்றாட கூலித்தொழில் செய்கின்ற குடும்ப நபர்கள் மத்தியில் இந்த பழக்கவழக்கங்கள் அதிகமாக காணப்படுவதனால் குடும்பங்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. பிரிவினை தன்மையும் அதேசமயம் குடும்ப பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நிலை காணப்படுகிறது. ஒரு சமூகத்தின் வளர்ச்சியைக் குன்ற வைக்கும் தீங்கு நிறைந்ததாக இப்பழக்கவழக்கங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

மேலும் இன்றாய நாட்களில் பல உயிரிழப்புகளும் இப்பழக்கவழக்கத்தினால் இடம்பெறுகின்றன.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த பழக்கவழக்கங்களிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக அரசு மற்றும் அரசு சார்பற்ற திணைக்களங்களின் பங்களிப்புடன் புணர்வாழ்வு மையங்களை அமைத்து அதன் ஊடாக பல சிகிச்சை நடைமுறைகளை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதுதொடர்பான விழிப்புணர்வு செயத் திட்டங்களும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading