World

இஸ்ரேல் இராணுவம் நடத்தும் தாக்குதல் – உயிரிழப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது

காஸா மீது இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து 29ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றது.

ஆரம்பத்தில் வான் மற்றும் கடல் வழியாக காஸா மீது குண்டுகளை வீசி தாக்கி வந்த இஸ்ரேல் இராணுவம் கடந்த சில நாட்களாக தரைவழியாக காஸாவிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றது.

நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் போரால் காஸா நகரம் சிதைந்து வருகின்றது.

இந்நிலையில், காஸாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமான ஜபாலியா அகதிகள் முகாம் மீது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இஸ்ரேல் இராணுவம் வான்தாக்குதல் நடத்தியது.

குண்டு வீச்சில் குடியிருப்பு கட்டிடங்கள் தரைமட்டமானதாகவும் பெண்கள், சிறுவர்கள் உட்பட பலர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்ததாகவும் காஸா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், போர் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை காஸாவில் 9 ஆயிரத்து 61 பேர் பலியாகி இருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் 3,760 குழந்தைகள், 2,326 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 32 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இருதரப்பிலும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading