World

இஸ்ரேல் ஒரு புற்றுநோய் – வேரிலேயே அழிக்கப்பட வேண்டும்!!

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமெனி மீண்டும் இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ளார்.

இஸ்ரேல் அதன் வேர்களிலிருந்து அழிக்கப்பட வேண்டிய புற்றுநோய் கட்டி போன்றது என்று கமெனி கூறினார்.

இஸ்ரேல் அமெரிக்காவின் செல்ல நாய் போல இருப்பதாகவும், அதன் உத்தரவுகளின்படி விளையாடுவதாகவும் அவர் விமர்சித்தார்.

மேலும், “ஈரானில் ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதே இஸ்ரேலின் குறிக்கோள். போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும் இஸ்ரேலை நம்ப முடியாது. எந்த நேரத்திலும் ஈரான் தாக்கப்படலாம். அவ்வாறு நடந்தால், கடந்த மாதத்தை போல கடுமையாக பதிலடி கொடுப்போம்.

அமெரிக்காவும் அதன் செல்லப்பிராணி இஸ்ரேலும் சண்டைக்கு வந்தாலும், ஈரானுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அவர்கள் ஒரு அடி பின்வாங்க வேண்டும்.

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர்ந்தால், இஸ்ரேல் இன்னும் கடுமையான அடிகளைச் சந்திக்கும். மத்திய கிழக்கில் அமெரிக்கா இஸ்ரேலை ஊக்குவித்து வருகிறது. இஸ்ரேலின் செயல்களுக்கு அமெரிக்கா முழுப் பொறுப்பேற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading