World

இஸ்ரேல் தலைநகரை சரமாரியாக தாக்கிய ஹமாஸ் ஏவுகணைகள்

இஸ்ரேலிய தலைநகரான டெல் அவிவில் உள்ள ஒன்பது மாடி அடுக்கு குடியிருப்பு மீது இன்று வெள்ளிக்கிழமை மாலைவேளை ஹமாஸ் அமைப்பினர் சரமாரியான ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 20 வயது முதல் 78 வயதானவர்கள் வரையான நான்கு பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுக்குமாடி கட்டடத்தின் மேல் தளத்தில் பெரும் சேதம் ஏற்பட்டதையும், சம்பவ இடத்தில் இருந்து புகை எழுவதையும் சம்பவ இடத்தில் இருந்து பதிவான காட்சிகள் காட்டுகின்றன.

இஸ்ரேல் தலைநகரை சரமாரியாக தாக்கிய ஹமாஸ் ஏவுகணைகள் : பலர்காயம்(காணொளி) | Tel Aviv Apartment Hit By Hamas Rocket

இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பு மீது மூன்று ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஏவுகணை தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக தகவல் எதுவும் வெளியாகவில்லை

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading