World

‘இஸ்ரேல்- ஹமாஸ் போர்’ பயங்கரமானது; ஐ.நா கவலை

‘இஸ்ரேல்- ஹமாஸ் போர்’ பயங்கரமாக மாறி வருகிறது என்று ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்தப் போரில் காஸாவுக்குள் செயல்படும் ‘யுஎன்ஆர்டபிள்யுஏ’ எனும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா உதவி அமைப்பின் 89 ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.

இது, ஐ.நா வரலாற்றில் ஊழியர்கள் கொல்லப்பட்ட மிக மோசமான போர். பல ஊழியர்களின் குடும்பத்தினரும் உயிரிழந்தனர்.

கடந்த அக்டோபரில் இஸ்ரேலை ஹமாஸ் தாக்கியதைத் தொடர்ந்து போர் மூண்டது.

இஸ்ரேல், ஹமாஸ் மீது பதிலடித் தாக்குதல் தொடங்கியதிலிருந்து சுகாதாரப் பராமரிப்புகள் மீது நூற்றுக்கும் மேற்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. உதவி செய்த ஊழியர்களில் பலரும் கொல்லப்பட்டனர்.

ஒவ்வொரு நாளும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.

வடக்கு, மத்திய, தெற்கு வட்டாரங்களில் ஆண், பெண் என வீட்டில் மற்றும் அகதிகள் முகாம்களில் உள்ளவர்களும் கொல்லப்படுகின்றனர்” என தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading