World

ஈரானுக்கு பணத்தாசை காட்டி பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அமெரிக்கா

ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு விரும்பும் அமெரிக்கா முதலீடு, முடக்கப்பட்ட நிதிகளை விடுவித்தல் உள்ளிட்ட ஆசையைத் தூண்டும் விடயங்களை முன்வைத்துள்ளது.

ரகசியமாக ஈரானுடன் பேச்சு

அத்துடன், பொதுநலனுக்கான அணுசக்தி திட்டத்தில் பல பில்லியன் டொலர் முதலீடு உள்ளிட்டவையும் வாக்குறுதி அளித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே சமீபத்திய இராணுவத் தாக்குதல்கள் இருந்தபோதிலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

ஈரானுக்கு பணத்தாசை காட்டி பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அமெரிக்கா | Investment Funds Us Offer To Iran

வெளியான தகவல்களின் அடிப்படையில், அமெரிக்க அதிகாரிகளும் மத்திய கிழக்கு அமைச்சர்கர்களும் ரகசியமாக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், ஈரான் ஒருபோதும் யுரேனியம் செறிவூட்டல் முன்னெடுக்கக் கூடாது என்றே அமெரிக்கா தரப்பு கட்டாயப்படுத்தி வருகிறது. ஆனால், ஈரான் தொடர்ந்து மறுத்தும் வருகிறது.

ஈரானுக்கு பணத்தாசை காட்டி பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அமெரிக்கா | Investment Funds Us Offer To Iran

இந்த நிலையிலேயே 20 முதல் 30 பில்லியன் டொலர் வரையில் பொதுநலனுக்கான அணுசக்தி திட்டத்தில் முதலீடு, தடைகளை நீக்குதல் மற்றும் வெளிநாடுகளில் முடக்கபப்ட்டுள்ள நிதியில் இருந்து 6 பில்லியன் டொலர் வரையில் பயன்படுத்தும் அனுமதி உள்ளிட்டவையை அமெரிக்கா முன்வைத்துள்ளது.

மட்டுமின்றி, அமெரிக்கா சமீபத்தில் குண்டுவீசி சேதப்படுத்தியதாக கூறப்படும் ஃபோர்டோ அணுசக்தி தளத்தை மறுகட்டமைப்புக்கு உதவுவதாகவும் அமெரிக்கா வாக்குறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading