World

ஈரானுடன் கூட்டு சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்!

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டனர். முதல் முறையாக ஒருங்கிணைந்து இஸ்ரேலை தாக்குவதாக ஹவுதி படையினர் வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

ஈரானின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம், எரிசக்தி உற்பத்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது. பதிலுக்கு ஈரான் தரப்பு மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 3 பேர் உயிரிழந்தனர். இதை இஸ்ரேல் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இருதரப்புக்கு இடையே மோதல் தொடர்கின்ற காரணத்தால் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரான் மற்றும் அமேரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இஸ்ரேல் – ஈரான் மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. உலகத் தலைவர்கள் இந்த மோதல் கூடாது என வலியுறுத்தி உள்ளனர்.

ட்ரோன்கள் அழிப்பு: கடந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் தங்கள் தேசத்தை நோக்கி எதிரிகள் ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டவதாகவும், அதை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இருப்பினும் இந்த ட்ரோன் எங்கிருந்து வந்தது என்பதை இஸ்ரேல் தெரிவிக்கவில்லை.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading