World

ஈரான் – அமெரிக்க பேச்சுவார்த்தை! ட்ரம்ப்பை மையப்படுத்தி வெள்ளை மாளிகை அறிக்கை

அமெரிக்காவும் ஈரானும் தற்போது எந்த ஒரு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

மாறாக, வெள்ளை மாளிகை ஒபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட் எனப் பெயரிட்டுள்ள ஒரு முன்னெடுப்பின் மூலம் ஈரான் மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பதில் அக்கா கவனம் செலுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.“தற்போது எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. ஒருவேளை அவர்கள் அர்த்தமுள்ள வகையில் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று ஜனாதிபதி கருதும் வரை இது தொடரும்” என்று கரோலின் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

ஒபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்

அதுபோன்ற ஒரு நிலையை நாங்கள் இன்னும் காணவில்லை என்றும் லீவிட் தனது கருத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தை! ட்ரம்ப்பை மையப்படுத்தி வெள்ளை மாளிகை அறிக்கை | Iran Us Talks Update Whait House

மேலும், டொனால்ட் ட்ரம்ப் “அனைத்து வாய்ப்புகளையும் தொடர்ந்து தன்வசம் வைத்துள்ளார்” என்றும் லீவிட் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி “ஈரானின் இராணுவத்தை அழிக்க ஒபரேஷன் எபிக் ஃபியூரி’யை நாங்கள் மேற்கொண்டோம். இப்போது அவர்களின் பொருளாதாரத்தை அழிக்க ஒபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்’டை மேற்கொள்கிறோம்,” என்று லீவிட் மேலும் தெரிவித்துள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading