Local

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்கள்!

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்நிறுத்தப்படுவார்கள் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும்,
“நாட்டு மக்கள் மத்தியில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்பும் எமது முயற்சியை சிலர் விரும்பவில்லை. அவ்வாறானவர்கள் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி தீவிரவாதத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டுள்ளனர்.

நான் அமைச்சு பொறுப்பை ஏற்றுள்ளமை ஒரு பிரிவை சார்ந்த மக்களுக்காக மாத்திரம் அல்ல அனைத்து நாட்டு மக்களுக்குமே.
ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். நான் நீதி அமைச்சர் என்ற ரீதியில் செயற்படுவேன்.
எவராவது ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் மற்றும் தீவிரவாதத்துடன் தொடர்பு பட்டிருப்பார்கள் ஆயின் அவர்களில் இறுதி வரை உள்ள அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading