World

உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு அதிரடி நடவடிக்கை எடுக்கும் ரஷ்யா!

உக்ரைனுக்கு உதவும் நட்பு நாடுகள் வான்வெளியை பயன்படுத்த ரஷ்யா தடை விதித்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பால் ரஷியா மீது ஐரோப்பிய நாடுகள் கடும் கோவத்தில் உள்ளன.

ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக போரிடும் வகையில் உக்ரைனுக்கு நட்பு நாடுகள் ஆயுதங்களை கொடுத்து உதவி வருகிறது. லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியா மற்றும் ஸ்லோவேனியா போன்ற நாடுகள், ரஷ்ய விமானங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முன்பு குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கும் வகையில், தனது வான்வெளியை மூடியதாக் ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதற்கு முன்பு ருமேனியா, பல்கேரியா, போலந்து மற்றும் செக் குடியரசு விமானங்கள் தனது வான்வெளியில் பறப்பதற்கு ரஷியா அனுமதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ரஷிய விமானங்கள் தனது வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கும் நடவடிக்கைகளை ஜெர்மனி அரசு மேற்கொண்டு வருகிறது. ஜெர்மனி வான்வெளியை மூடும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஜெர்மனி நாட்டின் விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் வோல்கர் விஸ்சிங் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading