World

உக்ரைனுடன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் ரஷ்யா:

உக்ரைனுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது தூதுவர்கள் மூலம் சமிக்ஞை செய்துள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் முதல் போர் நிறுத்தம் செய்யவதற்கும், அது குறித்த ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்வதற்கும் புடின் தயாராக இருப்பதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

“போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று ரஷ்ய ஜனாதிபதி கூறியதாக அவரை சந்தித்த மூத்த சர்வதேச அதிகாரி ஒருவர் நியூயோர்க் டைம்ஸிடம் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், கிரிமியா உட்பட ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை திரும்பப் பெறுவதாக உறுதியளித்துள்ள நிலையில், உக்ரேனிய அதிகாரிகள் இந்த கட்டத்தில் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்கத் தயாராக இருக்கிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

புடினின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் உக்ரேனிய எதிர்த்தாக்குதல், போர்க்களத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டை மற்றும் இராணுவ உதவியை வழங்க மேற்குலகின் விருப்பமின்மை ஆகியவற்றிலிருந்து உருவானது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், ரஷ்யா சமாதான ஒப்பந்தங்களை அனுப்புவதும் போரை நிறுத்த விருப்பம் தெரிவிப்பதும் இது முதல் முறை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் போர் வெடித்தது. இரு நாடுகளும் இந்த போரில் பலத்த இழப்புகளை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading