Local

உடன் அமுலுக்குவரும் வகையில் இன்று முதல் முடக்கப்பட்ட பகுதிகள்!

இன்று காலை முதல் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக கொவிட் −19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இதன்படி ,கொழும்பு, கம்பஹா, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் காலி மாவட்டங்களுக்குட்பட்ட உட்பட்ட கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன.

அந்த வகையில் கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிங்கபுர கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த கங்ஹிந்தசெவன தொடர்மாடி குடியிருப்பை தவிர்ந்த ஏனைய பகுதிகளும், கம்பஹா மாவட்டத்தின் களனி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பொரல்ல 100 ஆம் தோட்ட கிராம சேவகர் பிரிவும் முடக்கப்பட்டன.

மேலும் ,காலி இந்துருவ கோனகல கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பொல்தொடுவ கிராமம், அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய வளத்தப்பிட்டி கிராமம், மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை கிழக்கு, மேற்கு மற்றும் மாஞ்சோலை பதுரியா ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading