Gossip

உடலுறவுக்குப் பிறகு திடீரென நினைவாற்றலை இழந்த மனிதர்!

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த மனிதருக்கு ஒரு விநோதமான சம்பவம் நடந்திருக்கிறது. அவர் மனைவியுடன் உடலுறவு கொண்ட 10 நிமிட இடைவெளியில் தற்காலிக நினைவு இழப்பால் பாதிக்கப்பட்டார்.

அந்த மனிதருக்கு வயது 66. அவருக்கு இந்த சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் இரவில் அவரது திருமண விழாவைக் கொண்டாடியிருக்கிறார். ஆனால் அடுத்த நாள் மதியம் மனைவியுடன் இருந்த பிறகு அத்தனையும் மறந்துவிட்டார். இதனால் மருத்துவமனைக்கு விரைந்து சென்றிருக்கிறார் அந்த நபர்.

அவரது நோய் குறித்த அறிக்கை கூறுவதாவது, “ அந்த நபர் தனது மொபைலில் மணிப் பார்த்த போது அதிர்ச்சியடைந்திருக்கிறார். அதற்கு முந்தைய நாள் இரவிலும் காலையிலும் என்ன நடந்தது என்பது அவருக்குத் துளியும் நினைவிலில்லை. அவர் தனது மனைவி மகளிடம் தேதி மற்றும் நேரம் குறித்துப் பல கேள்விகள் கேட்டிருக்கிறார். தவிர அவருக்கு வேறெந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

அந்த மனிதருக்கு ஏற்பட்ட தற்காலிக நினைவு இழப்பால் மூளையில் சில சமீபத்திய நினைவுகள் மறைந்து விடும் சில நேரம் அது பல வருடங்கள் வரை நீளும். தற்காலிக நினைவு இழப்பு ஏற்பட்டால் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்பதை மறக்க நேரிடலாம். இதனால் பக்கவாதம், வலிப்பு போன்ற நோய்கள் ஏற்படாது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading