World

உடல் உறுப்புகளை அறுத்துக் கொண்டு வேற்றுக் கிரக வாசியாக மாறிய இளைஞர்!

இளைஞர் ஒருவர், மூக்கு, காது, உதடு என உடல் உறுப்பு பாகங்களை அறுத்துக்கொண்டு தன்னை வேற்று கிரக வாசியாக மாற்றிக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரித்தானியாவில் வசிக்கும் நபர் 32 வயதான Anthony Loffredo.இவர் தன்னை ஏலியனாக மாற்றிக்கொள்ள, காது, மூக்கு, நாக்கு என உடல் பாகங்களை அறுத்துகொண்டு ஹாலிவுட் பட கிரகவாசி போல் மாறியுள்ளார்.

மேலும், கண்கள் பயங்கரமாக இருக்க டாட்டூவை சுற்றியும் வரைந்துள்ளார். கிட்டதட்ட 4 வருடங்களாக தன்னை மாற்றிக்கொள்ள செயல்பட்டுள்ளார்.
இதனையடுத்து, அடிக்கடி மாற்றங்கள் செய்யும் முயற்சியை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், இது எனது நீண்ட நாள் கனவு எனவும், இந்த தோற்றத்திற்காக பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading