Local

உணவக உரிமையாளர்கள் வருமானம் இல்லாமல் தவிர்ப்பு!

சிற்றுண்டிகளின் விலை அதிகரித்துள்ளதால் பேக்கரி மற்றும் உணவக உரிமையாளர்களின் நாளாந்த வருமானம் ஈட்டும் வழிகள் முடங்கியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

உணவகங்களில் தேநீர் 25 ரூபாவாகவும், அப்பம் 20 ரூபாவாகவும், மாலுபாண் மற்றும் ரோல் ஒன்றின் விலை 50 ரூபாவாகவும் விற்கப்படும் நிலையில், அனைத்து சிற்றுண்டி உற்பத்திகளினதும் விலைகள் ஏற்றுக்கொள்ள முடியாதளவுக்கு அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது 450 கிராம் பாண் 100 ரூபா முதல் 110 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. கோதுமை மாவின் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப பாணின் விலை அதிகரிப்பானது அநீதியானது என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading