EntertainmentWorld

உணவுக்காக பூனையும், பணத்திற்காக பாலியல் தொழில் செய்யும் பெண்கள்!

விலைவாசி உயர்வு காரணமாக பிரித்தானியர்கள் பூனை உணவை உண்டு, பணத்துக்காக பாலியல் தொழில் செய்துவருவதாக ரஷ்ய தொலைக்காட்சி ஒன்று அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

ரஷ்ய அரசுத் தொலைக்காட்சியில் இறுக்கமான முகத்துடன் தோன்றிய பெண் செய்தியாளர் ஒருவர், பிரித்தானியர்கள் விலைவாசி உயர்வால் கஷ்டப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.சரியான உணவு இல்லாமல், பூனைகளுக்காக தயாரித்து விற்கப்படும் உணவை பிரித்தானியர்கள் உண்பதாகவும், பணத்துக்காக பாலியல் தொழில் செய்வதாகவும் கூறியுள்ளார் அந்த செய்தியாளர்.

பிரித்தானிய பெண்கள், உணவுக்காகவும், வீட்டை வெப்பப்படுத்துவதற்காகவும், மொத்தத்தில் கூறினால், பிழைப்புக்காக பாலியல் தொழில் பக்கம் திரும்பியுள்ளதாகவும் அந்த செய்தியாளர் அரசு தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.அத்துடன், பிரித்தானியா ஜேர்மனியை விட மோசமாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

பிரித்தானியாவைப் பொருத்தவரை, குறிப்பாக Cardiffஇல் வாழும் மக்கள், விலைவாசி உயர்வு காரணமாக பூனை உணவை உண்டு, வீட்டை வெப்பப்படுத்துவதற்காக ரேடியேட்டர்களை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார் அந்தப் பெண்.  

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading