World

உயிரிழந்த அல்-கொய்தா தலைவர் திடீரென காணொளியில் தோன்றியதால் பரபரப்பு!

உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்ட அல்-கொய்தாத் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி, 9/11 தாக்குதலின் 20 ஆவது ஆண்டு நிறைவு தொடர்பில் வெளியிடப்பட்ட ஒரு புதிய காணொளிப் பதிவில் தோன்றி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த 2001-ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ம் திகதி அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பென்டகன் உள்ளிட்ட இடங்களை விமானத்தை மோதவிட்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் 9/11 என குறிப்பிடப்படுகிறது.

இந்த தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் அமெரிக்கா இராணுவம் ஈடுபட்டது. தலிபான் தலைவர் பின்லேடன் உட்பட முக்கிய பயங்கரவாத தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர்.

அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கடந்த ஆண்டு உடல்நலம் குன்றி உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்,அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்த்தப்பட்ட நாளான நேற்று காணொளியொன்றில் தோன்றி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த காணொளியில், ஜெருசலேம் ஒருபோதும் யூதமயமாக்கப்படாது.சிரியாவில் ரஸ்ய இராணுவம் மீது அல்-கொய்தா ராணுவம் நடத்திய தாக்குதலை பாராட்டியுள்ளார்.

இந்நிலையில், அல்கொய்தா பயங்கரவாதக் குழுவின் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி, 9/11 தாக்குதலின் 20 ஆவது ஆண்டுவிழாவினை முன்னிட்டு சனிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு காணொளியில் தோன்றியுள்ளதாக இஸ்லாமிய தீவிரவாத குழுக்களின் இணையத்தள செயல்பாட்டைக் கண்காணிக்கும் SITE புலனாய்வு குழு கூறியுள்ளது.

எனினும்,குறித்த 60 நிமிட காணொளிக்காட்சிகள் சமீபத்தியவை தானா என்பது தொடர்பில் தற்சமயம் சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading