Sports

உயிருக்கு போராடும் முன்னாள் நியூசிலாந்து வீரர்!

முன்னாள் கிரிக்கெட் ஆல்ரவுண்டர்  கிறிஸ் கெய்ர்ன்ஸுக்கு உடல்நல குறைவு !
நியூசிலாந்து முன்னாள் ஆல் ரவுண்டர் கிறிஸ் கெய்ர்ன்ஸ் திடீரென மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

1989 முதல் 2006 வரையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி ஓய்வு பெற்றவர் நியூசிலாந்தைச் சேர்ந்த கிறிஸ் கெய்ர்ன்ஸ்.

51 வயதான கிறிஸ் கெய்ர்ன்ஸுக்கு சமீபத்தில் இதயத்தில் கோளாறு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அதற்கான சிகிச்சைகளை அவருக்கு செய்துள்ளபோதும் தற்போது ஆஸ்திரேலியாவின் கேன்பராவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் அவர் உயிருக்கு போராடி வருவதாகவும், ஆனால் சிகிச்சைக்கு அவரின் உடல் ஒத்துழைக்கவில்லை எனவும் நியூசிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading