Local

உயிரைக் காப்பாற்ற உதவுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவரை கொரோனா கொன்றுவிட்டது

புளோமினா செரியன் இன்னும் இருவருடங்கள் ஓய்வு நிலையில் இருக்கும் போது தானாகவே கொரோனா தொற்றுக்கான விசேட சிகிச்சை பிரிவில் பிரதம தாதியாக சென்று நோயாளிகளை பாதுகாக்க தனது உயிரை நீத்தார்.
பெரும்பாலும் தீவிர நீரழிவு ,நுரையிரல் சம்மந்தப்பட்ட நோய்களை கொண்ட சுகதார ஊழியர்கள் கொரோனா சிகிச்சை பிரிவிற்கு செல்வதை காரணம் காட்டி விலகிவிடுவார்கள்,
ஆனால் இவர் தனது வயது நோய் அஸ்த்மா ,நீரழீவு மாத்திரை பாவிப்பவராகயிருந்தும் தனது தலமையின் கீழ் தாதியர் சேவையை கவனிக்க வேண்டும் ஒரே முனைப்புடன் எதையும் பொருட்படுத்தாமல் கொரோனா நோயாளியிற்கு சிறந்த தாதியர் சேவையை வழங்க சென்றுள்ளார்,
இவர் இங்கிலாந்து பிரபல ஒக்ஸ்போர்ட் நகரின் ஜோன் ராட்க்ளிஃப் வைத்தியசாலையில் 15வருடமாக கடமை புரிகின்றார்.இவர் கொரோனா விசேட பிரிவில் தாமாக விரும்பி பணியாற்றினார்.
அவர் கடமைக்கு இறுதியாக சென்று கொரோனா தொற்று என அடையாளம் காணப்பட்டு செல்லும் போது அவரது கணவர் தெரிவித்தது
“அவள் ஆம்புலன்சில் வைத்தியசாலையை விட்டு வெளியேறியபோது, ​​நான் அவளிடம் இறுதியாக பார்ப்பேன் என்று வழியனுப்பவில்லை. திரும்பவும் நான் அவளிடம் பேசுவேன், அவளை நேரில் பார்க்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை.”

“அவர் இங்கிலாந்திலுள்ள பல நலன்புரி அமைப்பின் மதிப்புமிக்க உறுப்பினராக பலரால் அறியப்பட்டார். அவருக்கு நீரிழிவு நோய் மற்றும் மிக சமீபத்தில் ஆஸ்துமா இருந்தபோதிலும், உயிரைக் காப்பாற்றுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார்.
இவரது இறப்பால்
“பலர் குடும்பத்தினரை சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது பிலோமினா எப்பொழுதும் பிரியமானவர் பழகுவார்”
இவர் மூன்று பிள்ளைகளின் தாயாக இருந்ததை விட “எல்லோருக்கும் அன்பானவர்” என்று அவரது கணவர் கூறினார்
40 ஆண்டுகளாக தாதியர் சேவையாளராக இருந்தார், மத்திய கிழக்கிலும் பணிபுரிந்தார்.
இப்படி பல நற்மதிப்புமிக்க தாதிய சேவையாளர் பிலோமினா செரியன் உயிரிழப்பு மருத்துவ துறையில் போராடும் சக ஊழியர்களுக்கு மன உளச்சலை ஏற்படுத்தும் என்பது தெரிய வருகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading