Local

உறவினர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற 2 சிறுவர்கள் உயிரிழப்பு!

பல்லேகெலே, தென்னேகும்புர பாலத்திற்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இரண்டு சிறுவர்களும் உறவினர்களுடன் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு சிறுவர்களும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அதில் ஒரு சிறுவன் நேற்று முன்தினம் (24) உயிரிழந்துள்ளது.

மற்றைய சிறுவன் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (25) உயிரிழந்துள்ளார்.

அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய இரண்டு சிறுவர்களே உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading