Sports

உலகக் கிண்ண போட்டிக்கான புதிய சீருடை அறிமுகம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் அஸ்ரப் லாகூரில் கடாபி ஸ்டேடியத்தில் ஸ்டார் நேஷன் ஜெர்ஸியை அறிமுகப்படுத்தியது.
ஸ்டார் நேஷன் ஜெர்ஸி என்பது பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கும் ரசிகர்களுக்கும் தொடர்பினை ஏற்படுத்துவதாக இது அமையுமென பிசிபி தெரிவித்துள்ளது. மேலும் வளமையான கிரிக்கெட் வரலாற்றுக்கும் வருங்காலத்துக்கமான இணைப்பாக இந்த புதிய சீருடைகள் இருக்குமென தெரிவித்துள்ளார் அஸ்ரப்.
பிசிபியின் வருவாய் இயக்குநர் உஸ்மான் வாஹீத், “இந்த ஸ்டார் நேஷன் ஜெர்ஸி வெருமனே சீருடை கிடையாது. இது வெற்றி, தியாகம், கதைகளையும் உள்ளடக்கியது. இதி இருக்கும் ஒவ்வொரு நட்சத்திரங்களும் பாகிஸ்தான் ரசிகர்களையும் கிரிக்கெட் வீரர்களையும் குறிக்கும். ஒவ்வொரு பாகிஸ்தானியரும் பெருமைப்படும் விதமாக இந்த புதிய சீருடை தயாரிகப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3 – 0 என அசத்தல் வெற்றி பெற்றதால் ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஆசியக் கிண்ணம் நாளை (ஆக.30) தொடங்க உள்ளது. ஒருநாள் உலகக் கிண்ண போட்டி அக். 5 ஆம் நாள் இந்திய மண்ணில் தொடங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading