Sports

உலகக் கிண்ண வரலாற்றில் இந்தியாவை கதற விட்ட இரண்டு வீரர்கள்!

உலகக் கோப்பை வரலாற்றிலே பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கெதிரான போட்டியில் வரலாற்று சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12- போட்டிக்கான இன்றைய ஆட்டத்தில், பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதின.

இதில் இந்திய அணி நிர்ணயித்த 152 ஓட்டங்களை, பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களான மொகமத் ரிஷ்வான் 55 பந்தில் 79 ஓட்டங்களும், பாபர் அசாம் 52 பந்தில் 68 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல், 17.5 ஓவரில் 152 ஓட்டங்களை எட்டிப்பிடித்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற வைத்தனர்.

இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றிலே, இந்தியாவை முதல் முறையாக பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading