World

உலகப் பணக்காரர்கள் வரிசையில் முன்னேறிய அம்பானி!

கொரோனா காலத்தில் பெரும்பாலானவர்கள் பொருளாதார அளவில் சரிந்திருக்கும் நிலையில், சிலர் மட்டும் இதிலிருந்து தப்பித்து முன்னேறியிருக்கிறார்கள்.

அப்படி ஆச்சர்யப்படும்படி முன்னேறியிருப்பவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை அவருடைய சொத்து மதிப்பு 1880 கோடி டாலர் அளவுக்குக் கூடுதலாக உயர்ந்திருக்கிறது.

இதனால், புளும்பெர்க் வெளியிடும் உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஸ்டீல் பால்மரை அடுத்த இடத்திற்குத் தள்ளி அந்த இடத்திற்கு நகர்ந்திருக்கிறார் முகேஷ் அம்பானி.
கொரோனாவால் பலரைச் சரிய வைக்க முடிகிறது. ஒரு சிலர் இந்தக் காலத்திலும் முன்னேற முடிகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading