CinemaLocalWorld

உலகம் முழுவதும் 52000 திரைகளில் வெளியாகும் அவதார் 2

ஜேம்ஸ் கெமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றி பெற்ற படம் அவதார். 

25 கோடி அமெரிக்க டொலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டொலர்கள் வசூலைப் பெற்றது.

அதுவரை வேறு எந்த திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து  இந்த படத்தின் இரண்டாம் பாகம் நாளை (16) வெளியாகவுள்ளது. 

முதல் பாகத்தைப்போல மிக சிறப்பான காட்சி அனுபவத்துடன் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படம் உலகம் முழுவதும் 52,000 திரைகளில் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், உலகளவில் இதுவரை வெளியான திரைப்படங்களில் ‘அவதார் 2’ திரைப்படம் மிகப்பெரிய வசூலை எட்டும் என சினிமா வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading