Local

உலகம் முழுவதும் Omicron மாறுபாடு பெருந்தொற்று பரவியுள்ளதாக அச்சம்!

அச்சுறுத்தும் Omicron மாறுபாடு ஏற்கனவே உலகம் முழுவதும் பரவியுள்ளதாக தொற்றுநோயியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

தென்னாப்ரிக்காவின் பொஸ்வானா நாட்டில் கண்டறியப்பட்டுள்ள புதிய Omicron மாறுபாடானது பெருந்தொற்றின் இரண்டாம் கட்டமாக(pandemic 2.0) மாற அதிக வாய்ப்புள்ளதாக முதன்மை தொற்றுநோயியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால் கட்டாயம் கடுமையானப் பயணத்தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்பதுடன், மிகுந்த எச்சரிக்கையுடனும் அணுக கேட்டுக்கொண்டுள்ளனர்.

புதிய Omicron மாறுபாடானது நியூயார்க் நகரில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்ற போதும், மாகாண நிர்வாகத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, திங்கட்கிழமை முதல் 8 ஆப்ரிக்க நாடுகளுக்கு பயணத்தடை விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. புதிய Omicron மாறுபாடானது முதன்முதலில் பொஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பின்னர் தென்னாபிரிக்காவிற்கு நகர்ந்து, அங்கு அது ஆறு மாகாணங்களில் வேகமாக பரவுகிறது என்ற தகவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மட்டுமின்றி, தற்போதைய சூழலில் ஹொங்ஹொங், இஸ்ரேல் மற்றும் பெல்ஜியம் நாடுகளிலும், வெள்ளிக்கிழமை இரவு நெதர்லாந்திலும் Omicron மாறுபாடானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தந்த நாடுகளின் நிர்வாகங்கள் கடுமையான கட்டுப்பாடுகளை உடனையே விதிக்கவும் முதன்மை தொற்றுநோயியல் நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading