World

உலகளவில் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில்

உலகளவில் கோடீஸ்வரர்கள்பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

2019ம் ஆண்டில் மட்டும் ஒவ்வொரு மாதமும் மூன்று பில்லியனர்கள் இந்த பட்டியலில் இணைந்துள்ளனர், இதனால் இந்தியர்களின் எண்ணிக்கை 138ஆக உள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை சேர்த்துக் கொண்டால் எண்ணிக்கை 170ஆக உயர்கிறது.

இதில் உலகளவில் 9வது இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 67 மில்லியன் டொலராகும், அதாவது ஒவ்வொரு மணிநேரமும் 7 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.

நாட்டின்மிகப்பெரும் பணக்காரர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் மும்பையைச் சேர்ந்தவர்கள்.

50 பேர்மெகாபொலிஸில் வசிக்கின்றனர். இதனால் இந்தப் பகுதிஉலகளவில் ஒன்பதாவது பணக்கார நகரமாக உள்ளது.

இதையடுத்து30 பேருடன் புதுடெல்லியும் 17 பேருடன் பெங்களூருவும் 12 பேரும்அகமதாபாத்தும் இடம்பெற்றுள்ளது.

பணக்காரர்கள் பட்டியல்

முகேஷ் அம்பானி– 67 பில்லியன் டொலர்

எஸ்பி ஹிந்துஜா-27 பில்லியன் டொலர்

கவுதம் அதானி-17 பில்லியன் டொலர்

ஷிவ் நாடார்-17 பில்லியன் டொலர்

லக்ஷமி மிட்டல்-16 பில்லியன் டொலர்

உதய் கோடாக்- 15 பில்லியன் டொலர்

அசிம் பிரேம்ஜி- 14 பில்லியன் டொலர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading