Local

உலகளவில் முதன் முதலாக நியூசிலாந்தில் 2021 புத்தாண்டு பிறந்தது!

உலகளவில் முதன் முதலாக நியூசிலாந்தில் 2021 புத்தாண்டு பிறந்தது. உலகில் சூரியன் முதலில் உதிக்கும் நாடான நியூசிலாந்து, ஆஸ்திரேலியா- ஓசியானியா கண்டத்தில் உள்ளது. இந்திய நேரத்தை விட ஏழரை மணிநேரம் முன்னே உள்ள நியூசிலாந்தில் சூரியன் உதயமாகிறது. இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணியளவில் 2021 புத்தாண்டு நியூசிலாந்தில் பிறந்தது.

உலகளவில் முதன் முதலாக ஆக்லாந்து மக்கள் கண் கவர் வானவேடிக்கை நிகழ்ச்சிகளுடன் 2021 புத்தாண்டை வரவேற்றனர். தொடர்ந்து, ஆட்டம், பாட்டம், வானவேடிக்கைகளுடன் நியூசிலாந்து மக்கள் 2021 புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பறிமாறி வருகின்றனர்.

நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் 2021 புத்தாண்டு பிறக்கவுள்ளது. ஆஸ்திரேலியாவில் இன்னும் 2 மணி நேரத்தில் புத்தாண்டு பிறக்கவுள்ளது. தொடர்ந்து, ஜப்பானில் 4 மணி நேரத்தில் புத்தாண்டு பிறக்கவுள்ளது. இதற்குபின் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் 5 மணி நேரத்தில் புத்தாண்டு பிறக்கவுள்ளது. புத்தாண்டை வரவேற்ற கண் கவர் வாணவேடிக்கைகளுடன் பொதுமக்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர். இந்தியாவில், இன்னும் 7.30 மணி நேரத்தில்  2021 புத்தாண்டு பிறக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading