உலகின் அதிக அவதானத்தை பெற்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்!

சுவிட்ஸர்லாந்தின் சூரிச்சி நகரத்திலிருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு பயணித்த விமானம் ஒன்று திடீரென தனது பயணப் பாதையை மாற்றியுள்ளது.
சனிக்கிழமை பிற்பகல் பயணித்த LX38 என்ற சுவிஸ் விமானம் தனது பயண போக்கை மாற்றிய சம்பவம் விமான உலகில் அதிக கவனத்தைப் பெற்றது.
இதன் போது 18,000 பேர் வரை flightradar24.com இணையத்தில் விமான பாதையை கண்காணித்துள்ளனர்.
விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானத்தை அவசரமாக தரையிறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதியம் ஒரு மணியளவில் சூரிச்சி நகரத்திலிருந்து புறப்பட்ட விமானம் பிற்பகல் 4 மணியளவில் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. தரையிறங்கியதும் வாயிலில் ஏற்கனவே ஆம்புலன்ஸ் காத்திருந்ததென தெரிவிக்கப்படுகின்றது.
அதன் விமானம் பின்னர் திட்டமிட்டபடி சான் பிரான்சிஸ்கோ வரை பயணத்தை தொடர்ந்துள்ளது.
இந்த சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டதாக சுவிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
