Local

உலகின் சிறந்த ‘சுற்றுலாத் தீவுகளில்’ ஒன்றாக இலங்கை தெரிவு

சுற்றுலாப் பயண இணையத்தளமான ‘Big 7 Travel’ வெளியிட்ட “2023 ஆம் ஆண்டிற்கான உலகின் 50 சிறந்த தீவுகள்” பட்டியலில் சிறந்த தீவுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

50 தீவுகளில் 13ஆவது இடத்தில் உள்ள இலங்கை, கட்டுரையில் “அழகான” தீவாக வர்ணிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதன் புகழ்பெற்ற விருந்தோம்பல் மற்றும் சுவையான உணவுகளுக்காக ‘Big 7 Travel’ இணையத்தால் பாராட்டப்பட்டுள்ளது.

இலங்கைக்கு செல்வதற்கு சுற்றுலாப் பயணகள் “சுவாரச்சியமான காரணங்கள் உள்ளன” என்றும் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

அரச எதிர்ப்பு போராட்டங்கள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் கொவிட் தொற்று காரணமாக இலங்கை சுற்றுலாத்துறை கடந்த கால்ததில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இலங்கையின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி பாதையில் செல்கிறது.

இலங்கைக்கு வரும் மக்கள் தேயிலைத் தோட்டங்கள், யானைகள் நிறைந்த வனவிலங்கு பூங்காக்கள், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கட்டடங்கள் மற்றும் முடிவில்லாத நீண்ட கடற்கரை மற்றும் பல அழகிய இடங்களை பார்க்கலாம் என்று Big 7 Travel கூறுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading