Local

உலகின் மிகப்பெரிய கப்பல் இலங்கையில்!

உலகின் மிகப்பெரிய Ever Ace ,Ever Green கொள்கலன் கப்பல் இன்று (06) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்து நங்கூரமிட்டுள்ளது.

400 மீற்றர் நீளமும் 62 மீற்றர் அகலமும் உள்ள இந்த கப்பல் 23,992 கொள்கலன்களை சுமந்துகொண்டு நெதர்லாந்து ரொட்டர்டாம் துறைமுகத்திலிருந்து சுயெஸ் கால்வாயூடாக வந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

உலகின் 24 துறைமுகங்கள் மட்டுமே இந்தக் கப்பலை கையாள முடியும். அதில் தெற்காசிய வலயத்தில் கொழும்பு துறைமுகத்தில் மட்டுமே இந்தளவு பிரமாண்டமான கப்பலை அனுமதிக்கும் ஆழமும் கொள்ளளவும் கொண்ட சிறப்பான துறைமுகத்தை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading