World

உலகின் மிகப் பெரிய ஓவியம்!

கொரோனா லாக்டவுன் காலத்தை சிறப்பாக பயன்படுத்தியவர்களைப் பட்டியலிட்டால் நிச்சயமாக டாப் லிஸ்ட்டில் இடம்பிடிப்பார் பிரிட்டிஷ் கலைஞர் சச்சா ஜாஃப்ரி.  இதுவரை கேன்வாஸில் வரையப்பட்ட ஓவியங்களிலேயே மிகப்பெரிய ஓவியத்தை வரைந்து சாதனை படைத்துக்கொண்டிருக்கிறார் சச்சா.
அதாவது 1980 சதுர மீட்டர் பரப்பளவில் மிளிரப் போகிறது அந்த ஓவியம். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் துபாயில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலின் பால்ரூமில் இந்த ராட்சத ஓவியத்தை வரையத் தொடங்கிய சச்சா, அடுத்த மாதத்தில் நிறைவுசெய்யவிருக்கிறார்.
ஓவியத்துக்கான ஐடியாக்களை ஆன்லைன் மூலம் குழந்தைகளிடமிருந்து பெற்றிருக்கிறார். ஓவியத்தை வரைந்து முடித்தபின் அதை 60 துண்டு ஓவியங்களாக வெட்டி ஏலத்தில் விடப்போகிறார். ஒவ்வொரு துண்டு ஓவியமும் 30 சதுர மீட்டர் பரப்பளவு இருக்கும். ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகையைக் குழந்தைகளின் நலனுக்காக செலவிடப்போகிறாராம்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading