World

உலகின் மிக அழகான கையெழுத்து கொண்டவர் என்ற பெருமையைப் பெற்ற பெண்!

 

உலகின் மிக அழகான கையெழுத்து கொண்டவர் என்ற பெருமையை நேபாள இளம்பெண் ஒருவர் பெற்றுள்ளார்.

கையெழுத்து நன்றாக இருந்தால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என்று பொதுவாகச் சொல்வார்கள்.

அந்த வகையில், பிரகிருதி மாலா என்ற 14 வயது நேபாள மாணவி எழுதிய கடிதத்தைப் பார்த்து பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

இதனை பலரும் கொண்டாடினர். இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் 51வது ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, மாணவி பிரகிருதி மாலா, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வாழ்த்து கடிதம் எழுதினார்.

அவர் எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாக பரவி பல எதிர்வினைகளை ஏற்படுத்தியது. இதனைப் பார்த்த பல பயனாளிகள் ஆச்சரியமடைந்து அந்த மாணவனைப் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading