LocalWorld

உலகின் மிக நீளமான மலைப்பாம்பை பிடித்த இளைஞர்!

19 அடி நீள மலைப்பாம்பை பிடித்து வீரர் ஒருவர் தனது அனுபவத்தை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் வீரர் ஜேக் வலேரி மலைப் பாம்பைப் பிடிக்க அதனுடன் கட்டிப் புரண்டார்.
எத்தனையோ பாம்புகளைப் பிடித்து இருந்த போதும் இந்த ஒரு பாம்பு மட்டும்தான் தமக்கு அச்சத்தை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாம்பை விட்டு விடக்கூடாது என்று அதன் தலைப்பகுதியை இறுக்கிப் பிடித்து கட்டுக்குள் கொண்டு வரப் போராடியதாக தெரிவித்தார்.
இந்தப் போராட்டத்தை ஜேக்கின் நண்பர்கள் வீடியோ  எடுத்தனர். சிலர் அவருக்கு உதவ முயன்றனர்.
ஜேக்கின் தோழி ஒருவர் உடனடியாக காரில் இருந்த டேப்பை கொண்டு வந்து மலைப்பாம்பின் வாயை மூடி சீல் வைத்த பின்னர் பாம்பைப் பிடிக்கும் முயற்சி கைகூடியது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading