Entertainment

உலகில் நடந்த சிரிக்க வைக்கும் குற்றங்கள்:

உலகில் நாள்தோறும் பல்வேறு குற்றச் செயல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றுள் சில குற்றங்கள் நமக்கு பயத்தை ஏற்படுத்தும்.

ஆனால், நம்மை சிரிக்க வைக்கும் வினோதமான குற்றங்களும் உலகில் நடந்துள்ளன. அவற்றைக் குறித்து பார்ப்போம்.

சிரித்து சிக்கிய திருடன்

ஒரு வீட்டுக்குள் உள்ள உறுப்பினர்கள் நகைச்சுவையாக பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் வீட்டு மாடியில் திருடுவதற்காக முயற்சித்துக் கொண்டிருந்த திருடன் வீட்டிலுள்ளவர்கள் கூறிய நகைச்சுவைக்கு சிரிக்கத் தொடங்கியுள்ளான். இதனைக் கேட்டு வீட்டிலுள்ளவர்கள் திருடனைப் பிடித்து பொலிஸிடம் ஒப்படைத்தனர்.

எக்ஸ்ரே திருடர்கள்

சில திருடர்கள் மருத்துவமனைகளில் உள்ள எக்ஸ்ரேக்களை திருடி அதிலுள்ள வெள்ளியைப் பிரித்தெடுக்கிறார்கள் என சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

குடித்துவிட்டு வீட்டை அலங்கரித்த திருடன்

கிறிஸ்மஸ் பண்டிகையின்போது ஒரு திருடன் நன்றாக குடித்துவிட்டு, தான் திருடப்போன ஒரு வீட்டை அழகாக அலங்கரித்துவிட்டு பண்டிகைக் கொண்டாட்டத்தில் உற்சாகத்தில் இருந்தான்.

மூளையைத் திருடிய மருத்துவர்

ஐன்ஸ்டீன் இறந்தபோது அவரது உடலை அடக்கம் செய்வதற்கு முன் மருத்துவர் ஐன்ஸ்டீனின் மூளையைத் திருடியுள்ளார். ஐன்ஸ்டீனின் மூளையில் மருத்துவர் ஆராய்ச்சி நடத்துவதைத் பத்திரிகையாளர்கள் தெரிந்துகொண்டனர். குறித்து மருத்துவர் மீது திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

கொட்டகை திருடர்கள்

ஒரு குடும்பம் விடுமுறைக்காக வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது அவர்கள் வீட்டுக்கு வெளியே போடப்பட்டிருந்த கொட்டகை திருடப்பட்டிருந்தது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading