Local

உலகில் பிறக்கும் பத்து குழந்தைகளில் ஒரு குழந்தை குறைமாதத்தில் பிறக்கிறது

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகில் பிறக்கும் 10 குழந்தைகளில் ஒரு குழந்தை குறைமாதத்தில் பிறக்கிறது.

இந்த நிலை குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் உயிர்வாழ்வதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உலக சுகாதார நிறுவனம் லான்செட் மருத்துவ இதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

2020ஆம் ஆண்டில், 13.4 மில்லியன் குழந்தைகள் குறைமாதத்தில் (கருவுற்ற 37 வாரங்களுக்கு முன்பு) பிறந்ததாக அது மேலும் சுட்டிக்காட்டியது.

அந்த எண்ணிக்கை உலகில் உள்ள அனைத்து பிறப்புகளில் 10 இல் 1 என மதிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தைகளின் ஆரம்ப கட்டங்களில் ஏற்படும் இறப்புக்கு குறைப்பிரசவம் முக்கிய காரணமாக இருப்பதால், குறைமாத குழந்தைகளைப் பராமரிப்பதற்கும், குறைப்பிரசவத்தைத் தடுப்பதற்கும் அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.

அதற்கு தாய்வழி ஆரோக்கியம் மற்றும் தாய்வழி ஊட்டச்சத்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

கடந்த தசாப்தத்தில் உலகில் எந்தப் பகுதியும் குறைப்பிரசவத்தின் விகிதத்தை கணிசமாகக் குறைக்கவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.

2010 மற்றும் 2020க்கு இடையில் குறைப்பிரசவத்தில் உலகளாவிய வருடாந்திர குறைப்பு விகிதம் 0.14% என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், குறைப்பிரசவ பிரச்சினை குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் மட்டும் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை,

உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பிரச்சனைகள் தொடர்பிலான தரவுகள் உறுதிப்படுத்துவதாக அந்த அறிக்கையில் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் பிற்காலத்தில் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதாவது, அவற்றின் வளர்ச்சியில் தாமதம் நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற நாட்பட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதைக் குறிக்கலாம்.

எனவே, இக்குழந்தைகளுக்கு சிறப்பு கவனிப்பும் தேவை என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

குறைமாதப் பிறப்பைக் குறைக்க ஒவ்வொரு கர்ப்ப காலத்தின் போதும் தரமான மருத்துவப் பராமரிப்பைப் பெறுவது மிகவும் முக்கியம் என்கிறார்கள்.

இளம் பருவத்தினரின் கர்ப்பம், தொற்று, மோசமான ஊட்டச்சத்து ஆகியவை குறைப்பிரசவத்துடன் நெருக்கமாக தொடர்புடையவை.

மேலும் இந்த சிக்கல்களைக் கண்டறிந்து நிர்வகிக்க திட்டமிடப்பட வேண்டும். இதனால் குறை பிரசவத்தை குறைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரியான கர்ப்பத்தை உறுதிப்படுத்த ஆரம்ப கர்ப்பகால ஸ்கேன் மற்றும் பிரசவத்தை தாமதப்படுத்த அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் என்பன அவசியம் என உலக சுகாதார அமைப்பு மேலும் சுட்டிக்காட்டுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading