World

உலகில் மிகவும் பழமையான நாய் கின்னஸ் சாதனைப் படைத்தது!

ஸ்பைக் என்னும் நாய் உலகின் மிகவும் பழமையான நாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பைக் என்ற 23 வயதுடைய   நாய் உலகின் பழமையான நாய் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. 

1999 நவம்பர் மாதம் பிறந்த ஸ்பைக், டிசம்பர் 7 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு அன்று உலகின் மிக வயதான நாய் என அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்பைகின் உரிமையாளரான ரீட்டா கிம்பால் ஏறக்குறைய 14 ஆண்டுகள் ஸ்பைக்கை வளர்த்து வருவதாக தெரிவித்தார். 

ஒரு மளிகைக் கடையின் வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து ஸ்பைக்கை கண்டுப்பிடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்பைக் பார்வையை இழந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுவதுடன், செவி புலன் குறைப்பாடு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பதாக லொஸ் ஏஞ்சல்ஸில் ஜினோ வுல்ஃப் என்ற நாயே உலகின் மிக வயதான நாய் என அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது அந்த இடத்தை ஸ்பைக் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading