World

உலகில் வாழ சிறந்த நகரம் பட்டியல் வெளியானது!

உலகளவில் வாழ்வதற்கு சிறந்த நகரம் என ஒஸ்ட்ரியத் தலைநகர் வியன்னா (Vienna) நகரம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக Economist சஞ்சிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வியன்னா நகரம் ஏற்கனவே 2018, 2019-ஆம் ஆண்டுகளில் முதலிடத்தில் வந்தது.

நிலைத்தன்மை, சிறந்த உள்கட்டமைப்பு  ஆகிய அம்சங்கள் குடியிருப்பாளர்களைக் கவர்வதாகச் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

தரவரிசையில் முதல் 10 இடங்களில் வந்த நகரங்களில் 6, ஐரோப்பாவைச் சேர்ந்தவை.

கோப்பன்ஹேகன், ஸூரிக் (Zurich), ஜெனீவா (Geneva), ஃபிராங்க்ஃபர்ட் (Frankfurt), ஆம்ஸ்டர்டாம் (Amsterdam) ஆகிய ஐரோப்பிய நகரங்கள் தரவரிசையில் இடம்பெற்றிருந்தன.

ஒசாக்கா நகரமும், மெல்பர்ன் நகரமும் 10-ஆம் இடத்தில் வந்தன.

தரவரிசையில், பாரிஸ் – 19, பிரசல்ஸ் – 24, லண்டன் – 33, பார்சலோனா-35, மிலான் – 49, நியூயார்க் – 51, பெய்ச்சிங் – 71, ஒக்லாந்து – 34 ஆகிய இடங்களை பிடித்துள்ளது.

சிரியாவின் டமாஸ்கஸ் (Damascus) நகரம் வாழக்கூடிய நகரங்களின் தரவரிசையில் கடைசி இடத்தைப் பிடித்தது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading