Sports

உலக கிண்ணப் போட்டியில் இந்திய பாகிஸ்தான் மோதல்!

2022ஆம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கிண்ண தொடரில் இந்திய அணி முதலில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

மகளிர் உலகக் கோப்பை 2022 தொடர் எதிர்வரும் அடுத்த ஆண்டு மார்ச் 4ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் எந்த அணியை இந்திய அணி முதலில் எதிர்கொள்ளும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் 2022ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடக்கவுள்ள மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் (மார்ச் 6) பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்த ஆண்டு நடைபெற்ற ஆடவர் டி20 உலகக் கோப்பை போட்டியிலும் இந்திய தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டு 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading