Local

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவடைந்தபோதிலும் எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சடுதியாகக் குறைவடைந்துள்ள போதிலும், நாட்டில் எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது.”

– இவ்வாறு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

எனவே, எரிபொருள் விலைக் குறைப்பின் நன்மைகளைப் பொதுமக்களுக்கு நேரடியாகப்  பெற்றுக்கொடுக்கக்கூடிய விதம் குறித்து ஆராயப்படுகின்றது.

அண்மையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்ட போதும், பஸ் கட்டணம், பாடசாலைப் போக்குவரத்துக்  கட்டணம் ஆகியன குறைவடையவில்லை.

இதன் காரணமாக நாட்டில் எரிபொருளுக்கான நிலையான விலையை அறிவிப்பது தொடர்பில் தற்போது ஆராயப்படுகின்றது” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading