World

உலக நாடுகளுக்கு தலிபான்கள் எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானில் ஆட்சி நடத்தும் தலிபான் இயக்கத்தையும் உலக நாடுகள் அங்கீகரிக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என தலிபான் செய்தித் தொடர்பாளர் ஸூபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறினர். இதையடுத்து  இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சியை தலிபான் கைப்பற்றியது. ஆனால் எந்த நாடும் தலிபான் அரசை முறையாக அங்கீகரிக்கவில்லை. சீனாவும் பாகிஸ்தானும் தலிபான்களுடன் நல்லுறவை பேணி வருகின்றன. 
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானையும், ஆட்சி நடத்தும் தலிபான் இயக்கத்தையும் உலக நாடுகள் அங்கீகரிக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என தலிபான் செய்தித் தொடர்பாளர் ஸூபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். உலக நாடுகளுக்கு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பட்டால் அதற்கு தலிபான்கள் பொறுப்பேற்க மாட்டார்கள் என்றும் கடுமையாக பேசியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading