Local

ஊடரங்கு நேரத்தில் மளிகைப் பொருட்கள் வாங்க கடைக்கு சென்ற மகன், வீட்டிற்கு திரும்பும் போது மனைவியுடன் திரும்பியதால் குழப்பம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவசியம் இல்லாமல் வெளியே வருபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் ஷாகிபாபாத் காவல்துறைக்கு வந்த புகார் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மளிகைப் பொருட்கள் வாங்க கடைக்கு சென்ற தனது மகன், வீட்டிற்கு திரும்பும் போது மனைவியுடன் வந்துள்ளதாக தாய் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
மளிகை பொருட்கள் வாங்க தனது மகனை கடைக்கு அனுப்பியதாகவும், ஆனால் வரும் போது ஒரு பெண்ணை திருமணம் முடித்து அழைத்து வந்துள்ளதாகவும் தாய் புலம்பியுள்ளார. இதனை தனது மனம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக 26 வயது மகன் குட்டு கூறுகையில், ‘எனக்கும், சவிதா என்ற பெண்ணுக்கும் 2 மாதங்களுக்கு முன்பே ஹரித்வாரில் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணம் முடித்ததற்கான ஆவணங்கள் என் கைக்கு வரவில்லை.
தற்போது போக்குவரத்து வசதி இல்லாததால் ஹரித்வாருக்கு செல்ல முடியவில்லை. அதனால் டெல்லியில் உள்ள வாடகை வீட்டில் எனது மனைவியை தங்க வைத்தேன். ஊரடங்கு உத்தரவால் வீட்டை விட்டு வெளியேறும்படி, வீட்டு உரிமையாளர் கூறியதால், மனைவியை என்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்தேன் ‘ என கூறியுள்ளார். இருவரையும் வீட்டில் தங்க வைக்க குட்டுவின் தாய் அனுமதிக்காததால், ஊரடங்கு முடியும் வரை சவிதா தங்கியிருந்த வாடகை வீட்டிலேயே இருவரும் தங்க அனுமதிக்குமாறு வீட்டு உரிமையாளரிடம் காவல்துறையினர் பேசியுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading