Cinema

ஊழியர்களின் நலனில் அக்கறை காட்டும் சூர்யா!

நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா இருவரும் சமீபத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், அவர்களின் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டனர்.

நடிகர் சூர்யாவுக்கு சொந்தமான 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் பல ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அதேபோல் 2டி பட நிறுவனம் தயாரிக்கும் படங்களிலும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் பணியாற்றுகிறார்கள்.

தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்காக கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

ஊழியர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக வரும் ஜூலை 6 மற்றும் 7ம் தேதி சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தடுப்பூசி முகாம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே சூர்யா தனது பட நிறுவனம் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading