Features

எகிப்தில் 4500 ஆண்டு பழைமை வாய்ந்த சூரிய கோவில் கண்டுபிடிப்பு!

உலகில் பழமை வாய்ந்த கோவில்கள் உள்ளன. அவை பல ரகசியங்கள் புதைந்தே காணப்படுகின்றன. அந்த வகையில், கடைசியாக 1898-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட 2-வது சூரிய கோவிலானது நியூசெர்ரா என்கிற இடத்தில் கண்டுபிடித்து உள்ளனர்.

இந்த கோவிலை மிக பழமையான நாகரீகம் என்று எகிப்திய நாகரீகத்தை ஆய்வாளர்கள் கூறுவார்கள். அங்கு ஏராளமான தொன்மையான பொருட்களும், அதற்கான சுவடுகளும் அதிக அளவில் கிடைத்து வருகிறது. பல ஆண்டுகளாக செய்த ஆராய்ச்சியில் எகிப்தில் சூரிய கோவில் இருப்பதை கண்டுபிடித்திருந்தனர்.

இந்த வகையான சூரிய கோவில்கள் பார்வோன் நியூசெர் இனியால் என்கிற எகிப்திய மன்னனின் ஆட்சியில் கட்டப்பட்டவை. எனவே இவற்றை பாரா சூரிய கோவில் என்றே அழைக்கின்றனர்.

இதில், மொத்தம் 6 சூரிய கோவில்கள் இருப்பதாக ஆய்வுகளின் மூலம் கூறுகின்றனர். ஆனால் இதுவரை 2 சூரிய கோவில்களை மட்டுமே கண்டிபிடித்து இருந்தனர்.

தற்போது மூன்றாவது சூரிய கோவிலையும் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த சூரிய கோவில் சுமார் 4500 ஆண்டு பழமை வாய்ந்தது. இந்த சூரிய கோவிலை கி.மு.25 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்தபோது பார்வோன் நியூசெர் இனியால் மன்னரால் கட்டப்பட்டது.

இந்த கோவிலை கண்டுபிடித்த இடத்தில் மேலும் சில ஆய்வுகளை செய்து வருகின்றனர். இதற்கடியில் வேறு சில தொல்லியல் சார்ந்த தடயங்கள் கிடைக்கலாம் என எதிர் பார்க்கின்றனர்.

இங்கு, அகழ்வாராய்ச்சி செய்த போது அங்கு சில மண்பாண்டங்கள், ஜாடிகள் கண்டெடுக்கப்பட்டது. மேலும் கிடைத்த தடயங்களை வைத்து பார்க்கும் போது இங்கு நிச்சயம் இன்னொரு சூரிய கோவில் இருக்ககூடும் என கூறுகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading