Local

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் வெடிப்பு சம்பவம்!

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் கப்பலில் இருந்த 8 கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கப்பலில் இருந்து 25 கப்பல் ஊழியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுள் இந்தியர்கள் இருவர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை கட்டுப்படுத்துவதற்காக வானூர்த்தி ஊடாக இராசயன பொருட்கள் தூவப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading