World

எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்திற்கு நான்கரை நாட்கள் வேலை!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வாரத்திற்கு வேலை நாட்கள் நான்கரை நாட்களாக குறைத்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வாரத்தில் நான்கரை நாட்கள் மட்டும் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல், சனி மற்றும் ஞாயிறு புதிய வார இறுதி நாட்களாக அரசு அறிவித்துள்ளது.

ஜனவரி 1, 2022 முதல் அனைத்து மத்திய துறைகளிலும் இது நடைமுறைக்கு வரும் என அரசு செய்தி நிறுவனமான WAM தெரிவித்துள்ளது. இந்த புதிய முறை அனைத்து மத்திய அரசு நிறுவனங்களிலும் காலை 7:30 மணி முதல் மாலை 3:30 மணி வரை வேலை நேரத்துடன் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை வேலை நேரம் காலை 7.30 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணிக்கு முடிவடையும். வெள்ளிக்கிழமை தொழுகை மதியம் 1:15 மணிக்குப் பிறகு இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முடிவு உற்பத்தித்திறனை அதிகரிப்பது மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று WAM தெரிவித்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading