Local

எதிர்வரும் 15 நாட்கள் தீர்மானமிக்கது மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும்!

இலங்கையில் சமகாலத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், பொது மக்களுக்கு சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் 15 நாட்கள் தீர்மானமிக்கது என்பதால் பொது மக்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும் என அரசாங்கமும் சுகாதாரத்துறையும் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஒரு வார காலப்பகுதியில் மாத்திரம் 576 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், நாளொன்றில் பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது.

எனவே, பொது மக்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை தேவையற்ற வகையில் யாரும் வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading